வருடாபிஷேக விழா..

கோயிலில் வருடாபிஷேக விழா:

மதுரை:

மதுரை வண்டியூர் ஆவின் நகரில் உள்ள செல்வ விநாயகர் ஆலயத்தில் வருடாபிஷேக விழா நடைபெற்றது.
கோயில் முன்பாக, ஆலய அர்ச்சகர் சிவராமன் தலைமையில் வைத்தியநாதன் கொண்ட வேதியர் குழு, சிறப்பு ஹோமங்களை செய்தது.
இதையடுத்து, இத் திருக்கோயிலில் அமைந்துள்ள, சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர் போன்ற அபிஷேகங்கள் நடைபெற்றது.
இதையடுத்து, அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது.
விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, கோயில் நிர்வாகி மாரிமுத்து பிரசாதங்களை வழங்கினார்.
பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு, முகக் கவசத்துடன் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: