ஜெ. பல்கலைக்கழகத்தை, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் திமுகவின் சட்ட மசோதாவை கண்டித்து, அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியல். 200-க்கும் மேற்பட்டோர் கைது:
மதுரை:
இராஜபாளையத்தில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தோடு இணைக்கும் சட்ட மசோதாவை தாக்கல் செய்த திமுக அரசைக் கண்டித்தும், வெளிநடப்பு செய்த அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் உட்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்த திமுக அரசைக் கண்டித்தும், விடுதலை செய்ய கோரியும் பழையபேருந்து நிலையம் முன்புறம் அ.இ.அதிமுக நகரச் செயலாளர் ராணா பாஸ்கர் ராஜ் மற்றும் வடக்கு ஒன்றியச் செயலாளர் குருசாமி தலைமையில், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக அரசின், செயலைக் கண்டித்து 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ராஜபாளையம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.