கொரோனா தடுப்பூசி முகாம்:

காடுபட்டி ஊராட்சி வடகாடுபட்டியில்: தடுப்பூசி முகாம்:

சோழவந்தான்:

சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, வடகாடுபட்டி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி வளாகத்தில், கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் மனோஜ் பாண்டியன் தலைமை தாங்கினார். டாக்டர் அருண்கோபி, சுகாதார ஆய்வாளர்கள் ராதாகிருஷ்ணன் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தன் முகாமை தொடங்கி வைத்தார் .
உதவித் தலைவர் பிரதாப், ஊராட்சி செயலாளர் ரேவதி, கிராம செவிலியர் செல்வமணி, வார்டு உறுப்பினர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் தெய்வ ராணி பாசமலர் உதவியாளர்கள் முத்து கணேஷ் அமுதா மஞ்சு தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: