கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி:

கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி:

மதுரை:

மதுரை மாடக்குளம் கண்மாயில், குளிக்கச் சென்ற சிறுவர் நீரில் மூழ்கி இறந்துள்ளார்.
மதுரை மாடக்குளம் கண்மாய் ,மதுரை பைபாஸ் சாலை சொக்கலிங்க நகர் சேர்ந்த ஜீவன் வயது 14. சிறுவன், மாடக்குளம் கண்மாயில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக கண்மாயில் உள்ள சேற்றில் சிக்கிய சிறுவன் நீரில் மூழ்கினான். உடனடியாக அக்கம் பக்கத்தினர் ,மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கும் 108 அவசரகால ஊர்தி தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு, வந்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சிறுவன் இறந்த நிலையிலேயே, சிறுவனை மீட்க முடிந்தது சம்பவம் குறித்து மதுரை எஸ். எஸ். காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் நீரில் மூழ்கி இறந்தது அப்பகுதியில், பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: