மரக்கன்று நடும் விழா:

மரம் நடுவிழா:

மதுரை:

மதுரை கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில், ஆறுமுகம் நல்லமணி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் மரம் நடும் விழா நடைபெற்றது. நிகழ்விற்கு , கிழக்கு ரோட்டரி சங்கத் தலைவர் எம் பாலகுரு தலைமை தாங்கினார்.
பள்ளி முதல்வர் செல்லா நல்லமணி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று மதுரை சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சேர்மன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன் மரக்கன்றுகளை நட்டார்.
செயலாளர் ஜெகன் வரவேற்றார் நிகழ்ச்சியில், சங்க உறுப்பினர்கள் சிவ ராமசுப்பிரமணியன், துரை பாண்டியன், வந்தே மாதரம் பாட்ஷா, பாஸ்கர், நவீன் பரத் மற்றும் முன்னாள் தலைவர் நெல்லை பாலு ஆகியோர் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: