சாலையில் பெருக்கெடுக்கும் கழிவுநீர்:

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் அரைகுறை வேலையால், அடிக்கடி கழிவுநீர் வெளியேறுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு:

மதுரை:

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பைபாஸ் சாலை ,பொற்குடம் அப்பார்ட்மெண்ட் கேஎஃப்சி எதிர்புறம் செல்லும் சாலையில்,
பாதாள சாக்கடை அடிக்கடி கழிவுநீர் வெளியேறி சாலை முழுவதும் செல்வதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் ,நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் அரை குறையாக வேலை செய்வதால், இது போன்ற நிகழ்வு நிகழ்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு, நிரந்தர தீர்வு என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேபோல், மதுரை நகரில் 30-வது வார்டில், சௌபாக்யா விநாயகர் ஆலய தெருவில், கழிவு நீர் வாய்க்கால் அடிக்கடி பெருகி குடியிருப்புகளின் வாசல்களை சுற்றி வளைக்கிறது.
கடந்த பல மாதங்களாக, இந்த செயல் நடைபெறுவதாக, அப் பகுதியைச் சேர்ந்த கனகபாண்டியன், ராமச்சந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.
இது குறித்து, மாநகராட்சி உதவி பொறியாளரிடம், குடியிருப்போர் புகார் தெரிவித்தும், இக் குறையானது நிவர்த்திக்க படவில்லையாம்.
ஆகவே, மதுரை மாநகராட்சி ஆணையாளர், துரித நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: