கால்நடை புதிய மருந்தகத்தை, அமைச்சர் திறப ்பு:

சிங்கம்புணரியில் ரூ.34.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தகக் கட்டடத்தை திறந்து வைத்து, விவசாயிகளின் நண்பனாக இருக்கும் கால்நடைகளை நன்றாகப் பராமரிக்க வேண்டுமென,
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்
கேஆர்.பெரியகருப்பன், வேண்டுகோள்:

மதுரை:

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி நகர்ப்பகுதியில் கால்நடைப் பராமரிப்புத்துறையின் மூலம், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.34.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர்
ப.மதுசூதன் ரெட்டி, தலைமை வகித்தார்.
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்
கேஆர்.பெரியகருப்பன், புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தகத்தை திறந்து வைத்து பேசுகையில்,
முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கருணாநிதி, முதலமைச்சராக இருந்த பொழுது, மக்களுக்கு எந்த அளவிற்கு திட்டங்கள் தந்து பாதுகாக்கப்பட்டதோ அந்த அளவிற்கு மக்களின் நண்பனாக கூடவே இருக்கும் கால்நடைகளையும் நன்றாகப் பராமரிக்க வேண்டும் என்ற நோக்குடன், கால்நடைகளுக்குத் தேவையான மருத்துவ உட்கட்டமைப்புகளையும் வழங்கி பாதுகாத்து வந்த தலைவராக இருந்தவர்.
அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மக்களுக்கு தேவையான திட்டங்கள் எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு கால்நடைகள் வளர்ப்பதற்கு தேவையான திட்டங்களையும், உட்கட்டமைப்புகளையும் வழங்கி வருகிறார்கள். அந்தவகையில் கிராமப்பகுதிகளில் கால்நடை வளர்ப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கவும், அவர்களுக்கு தேவையான ஊக்கத்தை கொடுக்கும் வகையில் கிராமந்தோறும் கால்நடை மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு, கால்நடைகளை பராமரிப்பது மட்டுமன்றி கால்நடைகளை வளர்ப்பதற்கும் பொதுமக்களிடையே ஆக்கத்தையும், ஊக்கமும் கால்நடை மருத்துவர் மூலம் கொடுக்கப்படுகிறது.
பொதுவாக, கால்நடை வளர்ப்பவர்கள் அதைவிட மாட்டார்கள். அந்த அளவிற்கு பாசம் கொண்ட பிராணிகளாக நம்மிடையே வாழ்ந்து வரும். அவைகளின் செயல்களையும் பாசத்தையும் கண்டு மேலும் , அதிக எண்ணிக்கையுடன் கால்நடைகளை வளர்க்க எண்ணம் தோன்றும்.
பொதுவாக, கிராமப்பகுதிகளில் இணைத்தொழிலாக கறவைமாடுகள், ஆடுகள் வளர்ப்பது மூலம் பெண்களின் பொருளாதாரம் முன்னேற்றம் காணமுடிகின்றன. அந்த அளவிற்கு கால்நடைகள் பயன் அளிக்கின்றன. அதேபோல் கோழி வளர்ப்பின் மூலமும் வருவாய் ஒவ்வொரு குடும்பத்திலும் பெற முடிகின்றன. இதற்கு அடிப்படையாக கால்நடை மருத்துவமனை மிகப்பயனுள்ளதாக இருந்து வருவதால், அனைத்துப் பகுதிகளிலும் தடையின்றி கால்நடைகள் வளர்த்து பயன்பெறலாம். அதற்கு அரசும் தேவையான திட்டங்களையும், தேவையான உதவிகளையும் செய்து வருகின்றன. எனவே, பொதுமக்கள் கால்நடை வளர்ப்பில் சிறப்புக்கவனம் எடுத்து கால்நடைகள் வளர்த்து பயன்பெற வேண்டுமென,
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்
கேஆர்.பெரியகருப்பன் ,
தெரிவித்தார்.
பின்னர், 25 கால்நடை வளர்ப்போர்களுக்கு தீவன புல் விதைகளை,
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்
கேஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
முன்னதாக, கண்ணமங்கலப்பட்டி ஊராட்சி, கோட்டை வேங்கைப்பட்டி கிராமத்தில் உள்ள தந்தை பெரியார் சமத்துவபுரம் வளாகத்தில், முன்னாள் முதல்வர் டாக்டர்.கருணாநிதியின், அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பாக 100 மரக்கன்றுகள் நடவு செய்து பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை,
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்
கேஆர்.பெரியகருப்பன் மரக்கன்றுகளை, நடவு செய்து துவக்கி வைத்தார்.
இந் நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.சஞ்சீவிராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.கண்ணன், துணை இயக்குநர் மரு.முகமதுகான், உதவி இயக்குநர்கள் மரு.பாலசுப்பிரமணியன், மரு.இராமச்சந்திரன், மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர்
பூரண சங்கீதா, கூட்டுறவு வங்கி இயக்குநர் பள்ளத்தூர் திரு.ரவி, அரசு கால்நடை மருத்துவ அலுவலர்கள் மரு.பாலகிருஷ்ணன், மரு.வினோத் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: