சோழவந்தானுக்கு தேவை பைபாஸ் சாலை:

சோழவந்தானில் நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை:

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம்,
சோழவந்தானில், போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழகஅரசு நகர்புற வளர்ச்சி அமைச்சர் கே.என்.நேரு, நகர்புறங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச் சாலை அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். சோழவந்தான் சட்டமன்ற தொகுதி ஆகும்.
இங்கு, அரசு ஆஸ்பத்திரி,தனியார்
மருத்துவமனைகள், தீயணைப்புநிலையம்,காவல் நிலையம், சார் பதிவாளர் அலுவலகம்,தினசரி மற்றும் வார சந்தை பேரூராட்சி,துணை மின் நிலையம்,தபால் நிலையம்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்,மத்திய கூட்டுறவு வங்கி,நகர கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவில், சித்ரா பௌர்ணமி அன்று வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் ஜெனக நாராயணபெருமாள் கோவில்,துரோபதி அம்மன் கோவில்,ஐயப்பன் கோவில்,தேவாலயம் மற்றும் மசூதி ஒன்றாக ஆலயங்களும்,கல்லூரிகள்,மேல்நிலைப் பள்ளிகள்,மெட்ரிகுலேஷன்பள்ளிகள்,நடுநிலைப் பள்ளிகள்,தொடக்கப் பள்ளிகள் உள்ளன.எங்கு தென்கரை,முள்ளிப்பள்ளம்,மன்னாடிமங்கலம், குருவித்துறை,காடுபட்டி,விக்கிரமங்கலம், மேலக்கால்,கொடிமங்கலம்,தேனூர்,திருவேடகம், நெடுங்குளம்,திருவாலவாயநல்லூர்,சித்தாலங்குடி, சி.புதூர், ரிஷபம்,இரும்பாடி,கருப்பட்டி,நாச்சிகுளம், ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து இங்கு தினசரி மக்கள் வந்து செல்கின்றனர்.
அரசு பேருந்துகள்,தனியார் பேருந்துகள், கல்லூரி,பள்ளி வாகனங்கள், பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள்,விவசாயிகள் பயன்படுத்தக்கூடிய டிராக்டர்கள்,ஷேர் ஆட்டோக்கள்,தென்பகுதியிலிருந்து வடபகுதிக்கு, வட பகுதியிலிருந்து தென்பகுதிக்கு லாரிகள் செல்கின்றன.
சோழவந்தானுக்கு புறவழிச்சாலை அமைக்கக்கோரி, இப்பகுதி தொண்டு நிறுவனங்கள் உள்பட பல்வேறு அமைப்புகள் 40 ஆண்டுக்கு மேலாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தேர்தல் வரும்போதெல்லாம், வேட்பாளர்கள் புறவழிச்சாலை செய்து கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து வருகின்றனர்.
இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனால், சோழவந்தான் நகரில் போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது, ஏற்பட்டு பொதுமக்களுக்கு பல இன்னல்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வழியாக, அனுமதி பெற்ற தனியார் மற்றும் அரசு பேருந்துகள் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு கால தாமதமாகி விடுகிறது .குறித்த நேரத்தில் பேருந்தை இயக்க முடியவில்லை என்று கூறுகின்றனர்.
சோழவந்தானில் வழியாக செல்லாமல் ,மாற்று வழியில் பேருந்து இயக்கப்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கு நேர விரயமும், பணம் விரயமாகிறது.
நெல் மற்றும் தென்னைக்கு பெயர் போன சிறப்புமிக்க சோழவந்தானில், புறவழிச்சாலை இல்லாமல் பல்வேறு வகையில் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
அரசு சோழவந்தான் புறவழிச் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: