கொட்டாம்பட்டி பகுதியில் வளர்ச்சிப் பணிக ள்: ஆட்சியர் ஆய்வு:

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில்
நடைபெறக் கூடிய வளர்ச்சி திடட்ப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்:

மேலூர்:

மதுரை மாவட்டம்,
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் தும்பைபட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூபாய் 3 இலட்சம் மதிப்பீட்டில் மரக்கன்று நடும் பணியையும், ரூபாய் 5 இலட்சம் மதிப்பீட்டில் உப்பிலகுடி கண்மாய் தூர்வாரும் பணியையும் பிரதான் மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் ரூபாய் 3.40 இலட்சம் மதிப்பீட்டில் 2 நபர்களுக்கு வீடு கட்டப்பட்டு வரும் பணியையும் ,ஜல் ஜுவன் மிஷன் திட்டத்தின் கீழ், ரூபாய் 10.10 இலட்சம் மதிப்பீட்டில் 101 வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டப் பணிகளையும், அட்டப்பட்டி கிராமத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின்கீழ்இ ரூபாய் 4 இலட்சம் மதிப்பீட்டில் மீனாட்சிபுரம் சாவடி கட்டடப் பணிகளையும் மற்றும் ஜல் ஜுவன் மிஷன் திட்டத்தின்கீழ்இ ரூபாய் 6.34 இலட்சம் மதிப்பீட்டில் 25 வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளையும் பார்வையிட்டார்.
மேலும்இ கொடுக்காம்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ்இ ரூபாய் 22.65 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற கட்டடம் கட்டும் பணியையும், உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பு நிதி திட்டத்தின்கீழ் ரூபாய் 15.50 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டடம் கட்டும் பணியையும், ரூபாய் 1.35 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு நபருக்கு 2 மாடுகள் கட்டுவதற்கான மாட்டுக்கொட்டகை அமைக்கும் பணியையும் மற்றும்
20 ஆடுகள் கட்டுவதற்கான ஆட்டுக்கொட்டகை அமைக்கும் பணியையும் சுக்காம்பட்டி கிராமத்தில் பிரதமமந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூபாய் 308.81 இலட்சம் மதிப்பீட்டில் சுக்காம்பட்டியில் இருந்து லட்சுமிபுரம் வழியாக ஆவாரங்காடு செல்லும் சாலை அமைக்கும் பணியையும் கருங்கலக்குடி கிராமத்தில் 21 இலட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு
மேலாண்மை மையம் அமைக்கும் பணியையும் மற்றும் கொட்டாம்பட்டி கிராமத்தில் 21 இலட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்கும் பணியையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து, சொக்கலிங்கபுரம் கிராமத்தில் பிரதான் மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ், ஒரு நபருக்கு ரூபாய் 1.70 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டப்பட்டு வரும் பணியையும் மற்றும் கொட்டாம்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், ரூபாய் 1.53 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு நபருக்கு 10 ஆடுகள் கட்டுவதற்கான ஆட்டுக்கொட்டகை அமைக்கும் பணியையும் சொக்கலிங்கபுரம் கிராமத்தில் ரூபாய் 24.30 இலட்சம் மதிப்பீட்டில் தோப்புசாலை முதல் வயக்காகாரன்சியம்மன் கோவில் வரை சாலை அமைக்கும் பணியையும், கொட்டாம்பட்டி கிராமத்தில் பசுமை வீடு கட்டும் திட்டத்தின்கீழ், ரூபாய் 2.10 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு நபருக்கு வீடு கட்டும் பணியையும், பள்ளபட்டி கிராமத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின்கீழ் ரூபாய் 15 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் அமைக்கப்பட்டு வரும் பணியையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வில், கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்
செல்லப்பாண்டி அவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: