ஆதீனத்துக்கு, நிதி அமைச்சர் மரியாதை:

வியக்கத்தக்க வகையில் தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்து நின்ற ஆதினம் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் .. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரங்கல்

மதுரையில் உடல்நலக்குறைவால் மறைந்த 292 ஆவது மகா சன்னிதானம் ஆதினம் அவர்களுக்கு நேரில் இறுதி மரியாதை செலுத்த வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

292 ஆவது மகா சன்னிதானமாக இருந்து சில நாட்கள் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஆதினம் சிகிச்சை பலனின்றி மறைந்துவிட்டார் என்ற செய்தி வந்தவுடன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து நேற்று மாலை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் என்னை அழைத்து உடனடியாக மதுரைக்கு நேரில் சென்று மரியாதை செய்து விட்டு வாருங்கள் என்று கூறியதோடு இன்றைக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதன்முறையாக வேளாண்மைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்கிற சூழ்நிலையில் இருக்க இயலாத வகையில் இங்கே வருகை தர முதல்வரின் கட்டளையை ஏற்று நாங்கள் அவரது பணிக்கும் வரலாற்று சிறப்புமிக்க ஆதினத்தின் பெருமைக்கு ஏற்ப மரியாதை செலுத்தினோம் .என்னை பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் 290 ஆதீனம்வரை எங்கள் குடும்பத்தினர் உடன் நெருங்கிய தொடர்பு உண்டு . மறைந்த ஆதீனம் அவர்கள் என் மேல் மிகுந்த பாசத்துடன் இருந்தவர்.பல நிகழ்ச்சிகளில் என்னோடு நெருங்கி பழகியவர்.அதனால் எனக்கு ஏற்பட்ட இழப்பாக கருதுகிறேன் .அதேபோல் தருமை ஆதீனம் அவர்கள் எங்கள் குடும்பத்தினரோடு உறவில் இருக்கிறார் இன்றைக்கு அவர் மரபுகள் மற்றும் விதிமுறைகளின்படி காரியங்களை செய்ய வந்திருக்கிறார் அவருடன் இணைந்து நானும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களும் அவர்களுடன் உரையாடி ஆறுதல் கூறினோம் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிந்துகொண்டு தற்போது சென்னை செல்ல உள்ளோம் நாளை சுதந்திர தினத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் வாங்கிக்கொடுத்த மாநில உரிமையின் படி தேசியக்கொடியை அவரது மகன் முதல்வர் தளபதி அவர்கள் ஏற்றி வைத்திட உள்ளார். எந்த ஒரு நிறுவனமும் 292 தலைவர்கள் காண்பது வியக்கத்தக்க ஒரு உதாரணம் கலாச்சாரம் மற்றும் தமிழ் பண்பாட்டின் அடையாளமாக இதனை கருத வேண்டும் அந்த வழிமுறையில் வந்தவர் நம்மை விட்டு சென்றது வருந்தத்தக்க நிகழ்வாகும். ஆனால் ஆதினத்தின் பணிகள் தொடர்ந்து செவ்வனே நடைபெறும் என்ற நம்பிக்கையோடு தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வளர்கிற அவருக்கு ஊக்கம் கொடுக்கின்ற கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் அரசியலும் ஆன்மீகமும் கலந்து செயல்பட்ட ஆதினத்தின் இறுதி மரியாதையில் அரசு மரியாதை அளிக்கப்படுமா என்ற நிருபரின் கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் பொதுவாக ஜனநாயக நாட்டில் அரசியலும் ஆன்மீகமும் இணைந்து இருத்தல் மரபு அல்ல ஆன்மீகத்தின் செயல்பாடு என்பது வேறு அரசியல் செயல்பாடு என்பது வேறு இரண்டும் தனித்தனியாக இருப்பதுதான் சமுதாயத்திற்கு நல்லது மற்ற முடிவுகளை முதல்வர் எடுப்பார் என பதில் கூறினார்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: