பைக் மீது கார் மோதி இளைஞர் சாவு:

சமயநல்லூர் அருகே பைக் மீது கார் மோதியதில் இளைஞர் பலி

வாடிப்பட்டி:

மதுரை
மாவட்டம் சமயநல்லூர் அருகே பைக் மீது கார் மோதியதில் வாலிபர் பரிதாப பலியானார்.

மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த ராஜா மகன் கோபி (20). இவரும் இவரது நண்பர் பிரதீப் (23) . இருவரும் சோழவந்தான் சென்றுவிட்டு மீண்டும் மதுரைக்கு திரும்பியுள்ளனர் . சோழவந்தானில் இருந்து நான்கு வழி சாலையில் இணையும் இடத்தில் இவர்கள் கடந்த பொழுது சமயநல்லூர் பகுதியில் இருந்து வந்த கார் இவர்கள் ஓட்டிச்சென்ற டூவீலர் மீது மோதியது . இதில் சம்பவ இடத்திலேயே கோபி பரிதாபமாக பலியானார். படுகாயமடைந்த பிரதீப் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: