சோழவந்தான் பகுதிகளில் பலத்த மழை:

மதுரை அருகே சோழவந்தான் வட்டாரத்தில் பலத்த மழை:

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம்,
சோழவந்தான், பகுதியில் நேற்று மாலை 6 மணி முதல் தொடர்ந்து இடி மின்னலுடன் கன மழை பெய்தது.
ரோடுகளில் மழை வெள்ளம் கரை புரண்டு ஓடியது.கடந்த ஒரு வார காலமாக கடுமையான வெயிலின் வெப்பம் அதிகமாக இருந்தது இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
நேற்று மாலை 6 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் இடி மின்னல் மழை பெய்தது. இதனால், ரோடுகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.சாலையோர வியாபாரிகள் உடைய பொருட்கள் தண்ணீரில் மிதந்து சென்றது.
இந்தக் கடைகள் மற்றும் வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது.
அபிவிருத்தி பகுதியில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது.
திடீர் மழையால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: