சான்றிதழ் வழங்கும் விழா:

வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி:

மதுரை:

மதுரை சிம்மக்கலில், வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், ஓவியப் போட்டிக்கான சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
மாணவ மாணவிகளுக்கு, சான்றிதழ்களை வழங்கிய அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் பேசியதாவது:
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம், ஆறாம் ஆண்டு நினைவு நாளான 2021 ஜூலை-27ம் தேதி வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் வாட்ஸ்அப் மூலமாக ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
மதுரை மாநகராட்சி பள்ளிகளில், ஆறாவது முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் டாக்டர் அப்துல்கலாமின் உயரிய நோக்கங்களை வண்ண ஓவியங்களாக வரைந்து அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
இதில், மாணவ மாணவிகள் நூற்றி இருபது பேர் பங்கேற்றனர்.
அவர்களில், ஒவ்வொரு வகுப்பிலும் சிறந்த மூன்று ஓவியங்கள் தேர்வு செய்து மொத்தம் பன்னிரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவருக்கும் 08.08.2021ல் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டது.
இதில் ,மாணவ மாணவிகளுக்கு சேமிப்பையும் பசுமையையும் ஊக்கப்படுத்தும் வகையில் விதை உண்டியல்கள் பரிசளிக்கப்பட்டது.
விதை உண்டியலில் சேமிப்பு நிறைந்து உடைக்கும் போது அதை மண் தொட்டியில் கலந்தால் மரக்கன்றாக வளர்க்கலாம் என மாணவ மாணவிகளிடம் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், கலாம் சமூகநல அறக்கட்டளையின் நிறுவனர்
மாயகிருஷ்ணன், கலாம் வழியில் நண்பர்கள் நிறுவனர்
செந்தில்குமார், ஊக்குவிக்கும் கலாம் வல்லரசு நிறுவனர்
கார்த்திக், சிம்மக்கல் முதியோர் இல்ல மேலாளர்
கிரேசயஸ், யாதவா கல்லூரி பேராசிரியர்
சுந்தர், சமூக ஆர்வலர்
கிரி மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: