போலி பட்டா தயாரித்து கொடுத்த அலுவலர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்:

திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை , கொண்டு ரெட்டிபட்டி கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் :

மதுரை:

பட்டா பெற்ற விவசாயிகளின் நிலத்தை , போலி பட்டா தயாரித்து பல லட்சம் ஈட்டிய நில அளவையர் மற்றும் வி.ஏ.ஓ – வை கண்டித்து பாதிக்கப்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்.
நடத்தினர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை , கொண்டு ரெட்டி பட்டி கிராம மக்கள், முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கொண்டு ரெட்டிப்பட்டி கிராமத்தில், விவசாயிகள் பட்டா பெற்ற நிலத்தை, நில அளவையர் பெருமாள், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் , பிறருக்கு போலி பட்டா தயாரித்து லட்சக்கணக்கான ரூபாய் லாபம் ஈட்டி வருவதாகவும், அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் , பாதிக்கப்பட்ட விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதனைத் தொடர்ந்து, வட்டாட்சியர்.ஆனந்த கிருஷ்ணன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி , உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதேபோன்று, வாகைகுளம் கிராமத்தில் விவசாயி அழகுமலை என்பவரது வீட்டின் முன்பு உள்ள 3 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தை, பொதுப்பாதையாக பயன்படுத்தி வந்த நிலையில் ,அந்த மூன்று சென்ட் நிலத்தையும் பிறருக்கு பத்திரப்பதிவு செய்து அதிலும் , நில அளவையர் பெருமாள் மோசடி செய்துள்ளதாக, அழகுமலை , வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: