நெல் கொள்முதல் செய்ய விவசாயிகளிடம் பேரம ்?

மதுரை விளாச்சேரியில் நெல் கொள்முதல் செய்ய அதிக பணம் கேட்கும் அவலம் ; விவசாயிகள் வேதனை:

மதுரை:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்கவிற்குட்பட்ட விளாச்சேரி பகுதியில் உள்ள விவசாயிகள் 350ஏக்கருக்கு மேல் விவசாய நிலத்தில் நெல் விவசாயம் செய்து வருகின்றனர். விளாச்சேரியில் உள்ள மந்தையில் சேகரிக்கும் அப்பகுதியில் விளையும் நெல்பயிர்களை அரசு கொள்முதல் செய்கிறது.!

இடைத்தரகர்களுக்கு கொடுக்கும் பணத்தை தவிர்ப்பதற்காக., அரசே நெல்களை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வைத்த கோரிக்கையினை ஏற்று அரசே நேரடி கொள்முதல் செய்யும் என அறிவிக்கப்பட்டது.! இந்நிலையில்., நெல் மூடைகளை கொள்முதல் செய்ய வரும் சரக்கு வாகனங்களுக்கு வழக்கமாக மூடை ஒன்றுக்கு ரூ. 50 என இடைத்தரகர்களிடம் விவசாயிகள் கொடுத்து வந்துள்ளனர். இதனடிப்படையில்., அரசு நேரடி கொள்முதல் செய்வதால் சரக்கு வாகனங்களுக்கு கொடுக்கும் படி பணம் தர தேவையில்லை என மகிழ்ச்சியில் இருந்த விவசாயிகளுக்கு., அரசாங்கமே மூடை ஒன்றுக்கு ரூ.50 கேட்டு அவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளனர்.! அரசு நேரடி கொள்முதல் செய்வதனால் இடைத்தரகர்களுக்கு கொடுக்கும் பணத்தை தவிர்க்கலாம் என நினைத்த விவசாயிகளுக்கு அரசே பணத்தை கேட்பது நியாயமற்றது என விவசாயிகள் புலம்பி வருகின்றனர்..!

*இதுக்குறித்து., அப்பகுதி விவசாயி கூறியதாவது*

இடைத்தரகர்கள் இடையிலான பிரச்சனையில்., அரசே நேரடி கொள்முதல் செய்யவேண்டும் என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில்., அரசு நேரடியாக கொள்முதல் செய்ய முன்வந்த நிலையில்., இடைத்தரகர்கள் மூடை ஒன்றை கொண்டு செல்வதற்கு கேட்ட ரூ.50 பணத்தை அரசே கேட்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பிய விவசாயி., இந்த விவகாரதில் அரசாங்கம் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்..!!

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: