கொரோனா விழிப்புணர்வு: மாவட்ட ஆட்சியர்:

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக தொடர் விழிப்புணர்வு பிரச்சாரத்தினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்:

மேலூர் :

மதுரை மாவட்டத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது,
இதன் ஒருபகுதியாக, தொடர் விழிப்புணர்வு பிரச்சாரத்தினை, மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மேலூர் அருகே சூரக்குண்டு பகுதியில் தொடங்கி வைத்து, கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக ஸ்ட்ரீட் பிளே நிகழ்வு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் ,இந்நிகழ்ச்சியில், தடுப்பு போடப்படும் நிகழ்வை பார்வையிட்ட அவர், இத்தொற்றை தடுத்து பாதுகாப்பாக இருக்கும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரச்சுரத்தை பொதுமக்களுக்கு வழங்கினார்.
முன்னதாக, மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக வாகன ஓட்டிகளுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்ட அவர், முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் முககவசம் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந் நிகழ்ச்சியில் ,மேலூர் வருவாய் கோட்டாசியர் பிர்தௌஸ் பாத்திமா, மேலூர் வட்டாசியர் இளமுருகன், மேலூர் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, வட்டார மருத்துவ அலுவலர் சிவநேசன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜபார் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்..

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: