பார்வையற்றோர்களுக்கு அரிசி வழங்கும் விழ ா:

பாரதி யுவகேந்திரா சார்பில் பார்வையற்றோர்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் நிகழ்ச்சி:

மதுரை:

மதுரை பாரதி யுவகேந்திரா மற்றும் மதுரையின் அட்சயபாத்திரம் அமைப்பு சார்பில், பார்வையற்றோருக்கு
மாதா மாதம் வழங்கப்படும், ஒவ்வொருவருக்கும் 10 கிலோ அரிசி மற்றும் போர்வை வழங்கும் நிகழ்ச்சி, மதுரை மேல பெருமாள் மேஸ்திரி வீதி ஹோட்டல் பிரேம் நிவாஸ் அரங்கில் நடந்தது. மதுரையின் அட்சயபாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். நிகழ்ச்சிக்கு, ரோட்டரி உதவி ஆளுநர் வி. கார்மேகம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், மதுரை ஊரக வளர்ச்சி துறை முன்னாள் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரின் முன்னாள் நேர்முக உதவியாளர் சுப்பு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை முன்னிலை வகித்து, பார்வையற்றோருக்கு அரிசி மற்றும் போர்வை வழங்கினர். நிகழ்ச்சியில், மதுரை கிழக்கு ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பிரபு கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை, மதுரையின் அட்சய பாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: