விவசாயிகள் ஒட்டு வகை தென்னங்கன்றுகளை நட வு செய்ய ஆட்சியர் ஆலோசனை:

எஸ்.வி.மங்களம் அரசு தென்னை நாற்றுப்பண்ணையினை பார்வையிட்டு விவசாயிகள் அதிகளவு ஒட்டுவகை நெட்டை, குட்டை தென்னங்கன்றுகள் நடவு செய்து பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தகவல் :

மதுரை:

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ்.வி.மங்களம் ஊராட்சியில் இன்று (29.07.2021) வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தென்னை நாற்றுப்பண்ணையினை மாவட்ட ஆட்சித்தலைவர்
ப.மதுசூதன் ரெட்டி,
பார்வையிட்டு, செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: வேளாண்மைத்துறையின் மூலம் அரசுப் பண்ணையில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் வகையில் சிங்கம்புணரி வட்டத்தில், எஸ்.வி.மங்களம் ஊராட்சியில் தென்னை நாற்றுப்பண்ணை அமைத்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இப்பகுதியில், அதிகளவு தென்னை விவசாயம் பண்ணுவதால், இப்பகுதியில் விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இங்கு நெட்டை வகை, குட்டை வகை மற்றும் ஒட்டுவகையான தென்னங்கன்றுகள் வளர்க்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இப்பகுதியில் குட்டை, நெட்டை, ஒட்டுவகைக் கன்றுகள் அதிகளவு விவசாயிகளிடம் வரவேற்கப்பட்டுள்ளதால், விவசாயியின் தேவைக்கேற்ப பண்ணையில் தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஆண்டொன்றுக்கு நெட்டை வகை தென்னங்கன்றுகள் 14,000-மும், குட்டை, நெட்டை, ஒட்டுவகை தென்னங்கன்றுகள் 21,000-மும் விவசாயிகள் பெற்றுச் செல்கின்றனர். மேலும், பிற மாவட்டங்களிலிருந்து ஆண்டொன்றுக்கு குட்டை, நெட்டை வகை ஒட்டுக்கன்றுகள் 5,000-த்திற்கு மேல் வாங்கிச் செல்கிறார்கள். இந்த அரசுப் பண்ணையில், நெட்டை தென்னங்கன்று ரூ.60-ம், குட்டை, நெட்டை ஒட்டுவகைக் கன்று ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெளிச்சந்தையில், தனியார் பண்ணையில் ஒப்பிடுகையில், அங்கு ஒரு கன்று ரூ.150- முதல் ரூ.200 வரை, விற்பனை செய்யப்படுகிறது. அரசுப்பண்ணையில்தான் ரூ.60- முதல் ரூ.80- வரை விற்பனை செய்வதால், விவசாயிகளுக்கு மிகுந்த பொருளாதார சிக்கனம் கிடைக்கின்றன.
மேலும், தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் 500 ஏக்கர் வரை நடவு செய்து பராமரிக்கவும் மற்றும் பழைய தென்னங்கன்றுகள் பழுதடைந்தோ அல்லது நோய்த்தாக்குதலால் பாதிக்கப்பட்டு எவ்விதப்பயனும் இன்றி இருக்கும் மரங்களை அகற்றி அங்கு புதிய தென்னங்கன்று வைத்து பராமரிக்கும் வகையில் 1 ஹெக்டேருக்கு ரூ.53,500- வீதம் முழு மானியம் வழங்கப்படுகிறது. ஒருங்கிணைந்த பண்ணை விவசாயத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன்பெறலாம்.
தொடர்ந்து, தென்னை மரம் பராமரிக்கும் விவசாயியின் இணைத்தொழிலாக ஆடு, கோழி, தேன் பெட்டிகள் வளர்க்கலாம். இதற்கென தனியாக விளைநிலப்பகுதிகள் தேவையில்லை. இணைத்தொழிலுக்கு தேவையான மானியத்திட்டங்கள் வேளாண்மைத்துறையுடன் கால்நடைப் பராமரிப்புத்துறை, மகளிர் திட்டம் ஒருங்கிணைந்து மானியத்துடன் கூடிய கடனுதவித் திட்டங்கள் வழங்கப்படுகிறது. இத்தகைய திட்டங்களை ஒவ்வொரு விவசாயியும் முன்மாதிரியாக எடுத்துச்செய்யும் பொழுது ,அதன் மூலம் கிடைக்கும் இலாபம் மற்ற விவசாயிகளுக்கு ஊக்கத்தை கொடுக்கும் வகையில் அமையும். எனவே, விவசாயிகள் வேளாண்மைத்துறை அலுவலர்களுடன் தங்கள் பகுதி காலச்சூழ்நிலைக்கேற்ப விளைநிலங்களின் தன்மை குறித்து ஆலோசனைப் பெற்று செயல்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.
பின்னர், சிங்கம்புணரி வட்டம், அ.காளாப்பூர் ஊராட்சியில் முன்னோடி விவசாயி
சுந்தர் , விளைநிலத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு பகுதியில் தென்னை சாகுபடி, ஒரு பகுதியில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் மூலம் நெல் சாகுபடி, ஒரு பகுதியில் தேன் வளர்ப்பு பெட்டிகள் இவற்றுடன் ஆடுகள் மற்றும் கறவைமாடுகள் வளர்த்து பராமரிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு, இது குறித்து விவசாயிடம் மாவட்ட ஆட்சித்தலைவர், இதனுடைய செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். அப்பொழுது, முன்னோடி விவசாயி அவர்கள் தெரிவிக்கையில், வரப்புப்பகுதியில் தென்னங்கன்றுகள் வைத்து சுமார் 300 தென்னங்கன்றுகள் பராமரிக்கப்படுகிறது. விளைநிலத்தில் 3 மாதத்திற்கு ஒருமுறை நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோல் வரப்புப்பகுதியில் தேன் வளர்ப்பு பெட்டிகள் ஒரு பகுதிக்கு 5 வீதம் 50 பெட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த விளைநிலத்தில், கிடைக்கும் தீவனப்புல்களை வைத்து கறவைமாடுகள், ஆடுகள் வளர்க்கப்படுகின்றன.
இதனால், நாள்தோறும் போதிய பணி பார்ப்பது மட்டுமன்றி, 2 மாதத்திற்கு, 3 மாதத்திற்கு என ஒருமுறை ரூ.80,000- முதல் ரூ.1 இலட்சம் வரை வருவாய் ஈட்டுவதால், ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம் எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்து வருகிறது. இதற்கு மாவட்ட வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை உறுதுணையாக இருந்து வருகின்றன எனத் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, இதுபோன்ற ஆர்வமுடைய விவசாயிகளை தேர்வு செய்து, அந்தந்த வட்டத்தில் ஆர்வமுள்ள விவசாயிகளைக் கண்டறிந்து மற்ற விவசாயிகளுக்கு ஆர்வத்தை உருவாக்கும் வகையில் பயிற்சி வழங்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்
ப.மதுசூதன் ரெட்டி
, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், தென்னை நாற்றாங்கால் பண்ணையில் விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தில் விதைகள், பூச்சி மருந்துகள், தென்னங்கன்றுகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர்
ப.மதுசூதன் ரெட்டி,இ.ஆ.ப., வழங்கினார்;. இச்செய்தியாளர்கள் பயணத்தின்போது, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் த
வெங்கடேசன், வேளாண்மைத்துறை துணை இயக்குநர்
பன்னீர்ச்செல்வம், உதவி இயக்குநர்
அம்சவேணி, வேளாண்மை உதவி அலுவலர்
மாமுண்டிஸ்வரி, எஸ்.வி.மங்களம் ஊராட்சி மன்றத் தலைவர்
கலைச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: