மரக்கன்றுகள் நடும் விழா:

இளமனூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா:

மதுரை:

மதுரை மாவட்டம்
சாலையோர மரக்கன்றுகள் நடும் வாரத்தை முன்னிட்டு,
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், இளமனூர் ஊராட்சியில்,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
பி.மூர்த்தி
மரக்கன்றுகளை நடவு செய்தார்.
மதுரை மாவட்டம் சாலையோர மரக்கன்றுகள் நடும் வாரத்தை முன்னிட்டு,
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், இளமனூர் ஊராட்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தலைமையில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி மரக்கன்றுகளை, இன்று (28.07.2021) நடவு செய்து தெரிவிக்கையில்:-
தமிழ்நாடு முதலமைச்சர், சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட வேண்டும் என்று தெரிவித்ததன் அடிப்படையில், மதுரை மாவட்டத்தில் நாளை முதல் ஒரு வார காலத்திற்குள்ளாக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் 1 இலட்சம் மரக்கன்றுகளை நட உள்ளோம்.
இதில், நாவல்பழ மரம், புளிய மரம் மற்றும் கொடிக்காபுள்ளி மரம் முதலான மரங்கன்றுகளை நடுவதால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கிராம மக்கள் வருமானம் ஈட்டும் வகையில் பயனுள்ள மரக்கன்றுகளை நடுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன எனத் தெரிவித்தார்.
இந் நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர்
இந்துமதி , மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர்
சூரியகலா, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவர்
மணிமேகலை மதுரை கிழக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
சோனாபாய் மற்றும் திரு.
பாலகிருஷ்ணன்
உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: