ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் குடியமர்த்தப்பட ுவர்:

மதுரையில் அமைச்சர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம்:

மதுரை:

மதுரை மாவட்டம்
கோ.புதூர் சிட்கோ அலுவலகத்தில்
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை சார்பில்
தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டு
தொழில் முனைவோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை
ஊரகத் தொழிற்துறை அமைச்சர்
தா.மோ.அன்பரசன்
மற்றும்
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
பி.மூர்த்தி ஆகியோர்
வழங்கினார்கள்.
மதுரை மாவட்டம் கோ.புதூர் சிட்கோ அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர
நிறுவனங்கள் துறை சார்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டு
தொழில் முனைவோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு ஊரகத் தொழிற்துறை
அமைச்சர்
தா.மோ.அன்பரசன்,
மற்றும்
வணிகவரி மற்றும்
பதிவுத்துறை அமைச்சர்
பி.மூர்த்தி
ஆகியோர் இன்று (22.07.2021)
வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில்,தமிழக
ஊரக தொழில்துறை அமைச்சர்
தா.மோ.அன்பரசன்
தெரிவிக்கையில்:-
இன்றைய தினம் குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் தேனி மற்றும் மதுரை
மாவட்டங்களில் கட்டப்படுகின்ற மற்றும் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டு,
ஆய்வு செய்தோம். கடந்த கால ஆட்சியில் தேனி, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, திருப்பூர்
மற்றும் கோயம்புத்தூரில் சில நபர்கள் பயன்பெற வேண்டுமென்ற நோக்கத்தில் 30,000
வீடுகள் கட்டப்பட்டிருக்கிறது. தற்பொழுது, அவ் வீடுகள் பயனாளிகள் வசிக்காமல், கிடப்பில்
போடப்பட்டுள்ளது.
வைகை ஆற்றங்கரையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி, தங்க வைப்பதற்காக
ராஜாக்கூரில்,
ரூபாய் 47 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. இதுவரை,
இவ்வீடுகளில் பயனாளிகள் குடியமர்த்தப்படவில்லை.
வணிகவரித்துறை அமைச்சர்
மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசி முடிந்த அளவு ஆக்கிரமிப்பாளர்களை
இங்கு குடியமர்த்துவது இல்லையெனில், இப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களை
இவ்வீடுகளில் குடியமர்த்துவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்.
நம்முடைய மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஏழை, எளிய மக்களை
குடியமர்த்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும் மேற்கொள்ள வேண்டும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் கொரோனா நோய் தொற்று ஊரடங்கினால்,
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர்
தொழில்
நிறுவனங்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
மானியத்தொகை 280 கோடியில் 168 கோடியை உடனடியாக வழங்கியது.
உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளார்கள். தமிழகத்தை பொறுத்த வரையில்
தொழில்துறை பாதிக்காத அளவிற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு
முதலமைச்சர், மேற்கொண்டு வருகிறார்.
சிறு தொழில் நிறுவனங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில்,
ஊரக தொழில்துறை அதிகாரிகள் வங்கி மேலாளரை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டு
அவர்களுக்கு கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து கொண்டிருக்கிறது
இப்பகுதிகளில் வீட்டு
வாரியத்தில், 26,000
காலியாக உள்ளது. இவற்றில்,
10,000 வீடுகளின் கட்டுமானப்பணி முழுமையாக முடிவடைந்துள்ளது. மேலும்,
80 சதவீதம் வீடுகள் 3,4 மாதங்களில் முழுமையாக கட்டி முடிக்கப்படும்.
வறுமைக்கோட்டிற்கு
உள்ள பொதுமக்கள், தியாகிகளுக்கு அந்தந்த பகுதிகளில்
கட்டப்படும்
குடியிருப்புகளில்
மாவட்ட
ஆட்சித்
தலைவரின்
பரிந்துரையோடு,
குடியமர்த்தப்படுவார்கள்.
தமிழ்நாட்டை குடிசைகளே, இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு
சென்னையில் வீ
ட்டு வசதி வாரியத்தை, தமிழ்நாடு முன்னால் முதலமைச்சர்
கலைஞர்
தான், முதன்முதலான ஏற்படுத்தினார்கள். இளைஞர்கள் தொழில்
தொடங்குவதற்கு உறுதுணையாக
இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தளத்தில், தொழில் தொடங்குவதற்கு தேவையான
அனைத்து தகவல்களையும் பெறலாம் எனத் தெரிவித்தார்.
மதுரை சம்பகுளம் பகுதியில் தமிழ்நாடு அரசின் தொழில் வணிக துறையின்
திட்டத்தின் கீ
ழ் ரூ.1.37 கோடி திட்ட மதிப்பீட்
டில், தமிழ்நாடு அரசின் ரூ.29 இலட்சம்
மானிய உதவியுடன்; ஆரம்பிக்கப்பட்டுள்ள அகம், டயக்னாஸ்டிக்ஸ் என்ற கொரோனா மற்றும்
பொது மருத்துவ ஆய்வகத்தை பார்வையிட்ட பின், கோ.புதூர் சிட்கோ அலுவலகத்தில்
தமிழ்நாடு அரசின் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் தொழில் வணிக
துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு மாவட்ட தொழில் மையம் மூலமாக
நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில்
நிறுவன மேம்பாட்டுத் திட்டம் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு
உருவாக்கும் திட்டம், மாற்றுத் திறனாளிகளின் மானியம்; ஆகிய நலத் திட்டங்களின் 16
பயனாளிகளுக்கு ரூ.14,95,802 மதிப்பிலான காசோலை மற்றும் ஆணைகளையும்
ஊரகத் தொழிற்துறை அமைச்சர்
தா.மோ.அன்பரசன்
மற்றும்
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் .பி.மூர்த்தி
ஆகியோர்
வழங்கினார்கள்.
தொடர்ந்து ,தோப்பூர் உச்சப்பட்டியில் மடீட்சியா டிரேட் மற்றும் கன்வென்சன் சென்டர்
அமைவிடத்தையும், உச்சப்பட்டி அடுக்குமாடி குடியிருப்புகளையும், இராஜாக்கூர் அடுக்குமாடி
குடியிருப்புகளையும், தெற்குத்தெரு அடுக்குமாடி குடியிருப்புகளையும் பார்வையிட்டு
ஊரகத் தொழிற்துறை அமைச்சர்
தா.மோ.அன்பரசன்,
ஆய்வு
செய்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய மேலாண்மை இயக்குநர்

ம.கோவிந்த ராவ் ,
தொழில்துறை ஆணையர்
சிகி தாமஸ்
வைத்தியன்,
மாவட்ட ஆட்சித்தலைவர்;; மரு.எஸ்.அனீஷ் சேகர்,
(மதுரை),
சட்டமன்ற உறுப்பினர்கள்
கோ.தளபதி (மதுரை வடக்கு),

மு.பூமிநாதன் (மதுரை தெற்கு)
உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: