மதுரையில் வீடுகள் அகற்றம்: பொதுமக்கள் போ ராட்டம்:

மீனாட்சிபுரம் பகுதிகளில் வீடுகள் அகற்றம்: போராட்டத்தில் பொதுமக்கள்:

மதுரை:

மதுரை
மீனாட்சிபுரம், முல்லை நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
அப்பகுதி மக்கள் தங்களுடைய வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால்,அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
இதையடுத்து அப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுப்படி,ஆக்கிரமிப்புக்களை தொடர்ந்து அகற்றப்பட்டு வருவதாக சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
மொத்தம் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்படவுள்ளன.
இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் வீடுகள் முன்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனராம்.
இந்த வேலையில், மதுரை மாநகராட்சியின், மதுரை மாட்டுத் தாவணி பகுதிகளில் நீர் செல்லும் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும், அகற்ற ஆர்வம் காட்டவேணும் என, சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: