விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்குவோம், மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திரு முருகேஷ் தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு பவன்குமார் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் சாலை விதிகளை மதிப்போம் , பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வோம், விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்குவோம், என்ற வாசகங்கள் அடங்கிய விளம்பர தாள்களை பொதுமக்களுக்கு வழங்கி அனைவரும் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: