வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆணையாளர் ஆய்வு:

மதுரை மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன்,
ஆய்வு:

மதுரை:

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1க்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன்
ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 வார்டு எண்.18 மத்திய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, எஸ்.எஸ்.காலனி கோபால் ஐயர் தெருவில் ரூ.4.64 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மற்றும் சின்டெக்ஸ் தொட்டியினையும், பாரதியார் 5வது தெருவில் ரூ.4.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மற்றும் சின்டெக்ஸ் தொட்டியினையும், வார்டு எண்.15 மேலப்பொன்னகரம் 7வது தெருவில் ரூ.4.58 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மற்றும் சின்டெக்ஸ் தொட்டியினையும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், வார்டு எண்.17 போடி லைன் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்ட பணியினையும், வார்டு எண்.9 திருவள்ளுவர் காலனியில் ரூ.10.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பாதாள சாக்கடை திட்டம் அமைப்பது தொடர்பாகவும், வார்டு எண்.12 வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள பராமரிப்பு பணிகளையும், வார்டு எண்.12 யோகானந்தசாமி சன்னதி தெருவில் ரூ.4.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைப்பது தொடர்பாகவும், வார்டு எண்.9 தத்தனேரி மயானத்தில் ரூ.40.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கழிப்பறை, ஆழ்துளை கிணறு, தியான அறை, இறுதி சடங்குகள் செய்பவர்கள் அமரும் அறை, பேவர் பிளாக் சாலை உள்ளிட்ட பணிகள் அமைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, வார்டு எண்.17 எல்லீஸ் நகரில் செயல்பட்டு வரும் நுண் உரம் செயலாக்க மையத்தில் 12 தொட்டிகள் அமைக்கப்பட்டு மக்கும் கழிவுகளை தினந்தோறும் உரமாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இம்மையத்திற்கு எல்லீஸ் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று கழிவுகளை தரம் பிரித்து இலகுரக வாகனங்கள் மூலமாக பெறப்பட்டு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருவதை ஆணையாளர்,
ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் முன்பு பயன்பாட்டில் இருந்த குடிநீரேற்று நிலையத்தை பார்வையிட்டார்.
மேலும் ,வெள்ளி வீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் “வாழ்க வரியாளர்” சிறப்பு குறைதீர்க்கும் முகாமினை பார்வையிட்டு பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர்
குழந்தைவேலு, மக்கள் தொடர்பு அலுவலர்
மகேஸ்வரன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: