மாவட்ட உதவி இயக்குனர் திட்ட பணிகளை ஆய்வு செய்தார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் உதவி இயக்குனர் ஊராட்சிகள், திரு. லட்சுமி நரசிம்மன் தலைமையில் நடைபெற்றது. இதில் 100 நாள் திட்டம், பாரத பிரதமர் கிராமிய குடியிருப்பு திட்டம், மற்றும் மத்திய மாநில அரசுகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்தக் கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள், இதர அலுவலர்கள் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: