தமுக்கம் மைதானத்தில் கலாச்சார மையம் கட்ட ும் பணி:

மதுரை மாநகராட்சி
தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் கலாச்சார மையம் கட்டுமான பணியினை ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன்,
ஆய்வு:

மதுரை:

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் கலாச்சார மையம் கட்டுமான பணியினை ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன்,
ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான தமுக்கம் மைதானத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.47.72 கோடி மதிப்பீட்டில் கலாச்சார மையம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
தமுக்கம் மைதானத்தில், மொத்தம் உள்ள 9.68 ஏக்கர் பரப்பரளவில் சுமார் 2.47 ஏக்கர் பரப்பளவில் தரைமட்டத்திற்கு கீழ் ஒரு தளம் மற்றும் தரைதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இம்மையத்தில், தரைமட்டத்திற்கு கீழுள்ள தளத்தில் 234 எண்ணம் நான்கு சக்கர வாகனம் மற்றும் 357 எண்ணம் இரு சக்கர வாகனம் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், தொழில் மற்றும் வர்த்தக பொருட்காட்சி நடத்துவதற்கும், கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் 200 நபர்கள் முதல் 3500 நபர்கள் வரை பங்கு கொள்ளும் வகையில் பல்வேறு அளவில் உள் அரங்கத்தினை மாற்றி அமைக்கும் வசதிகளுடன் கூடிய அரங்கம் அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
இங்கு நடைபெற்று வரும் பணிகளை, ஆணையாளர்
ஆய்வு மேற்கொண்டு கட்டுமான பொருட்களின் தரம் குறித்தும், இவ்வளாகத்திற்குள் சிறப்பு விருந்தினர் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து இடையூறு இன்றி வந்து செல்வதற்காக அமைக்கப்பட்டு வரும் உள்ளே, வெளியே செல்லும் பாதைகள், சாய்வு தளம் குறித்தும் மற்றும் தீயணைப்பு வாகனம் எளிதில் வந்து செல்வது குறித்தும், மின்சாரம், குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைப்பது குறித்தும் ,ஆய்வு மேற்கொண்டார். மேலும், நடைபெற்று வரும் பணிகளில் கட்டுமான பொருட்கள் தரமானதாகவும், பணிகளை விரைந்து முடிக்குமாறும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளர்
ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் த
மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் (திட்டம்)
சுப்பிரமணியன், உதவிப் பொறியாளர்கள்
சோலை மலை,
பாலகுருநாதன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: