பெட்ரோல் விலை உயர்வால்… சைக்கிளுக்கு மீண்டும் புத்துயிர்!

பெட்ரோல் விலை உயர்வால் தற்போது, மக்கள் சைக்கிளுக்கு மாறிவிட்டனர். இதனால் வீட்டில் முடங்கிக் கிடந்த சைக்கிள்கள் பழுது பார்க்கப்பட்டு புத்துயிர் பெற்று வருகின்றன.
பெட்ரோல் விலை உயர்வால் தற்போது, மக்கள் சைக்கிளுக்கு மாறிவிட்டனர். இதனால் வீட்டில் முடங்கி கிடந்த சைக்கிள்கள் பழுது பார்க்கப்பட்டு புத்துயிர் பெற்று வருகின்றன.
கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாகன வாடகையும் உயர்ந்து காய்கறி உள்பட அத்தியாசிய பொருட்களின் விலையும், கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.
தனால் மோட்டார் சைக்கிள் வாகனப் போக்குவரத்து குறைந்து பழையபடி சைக்கிள்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சைக்கிள்களின் தேவை அதிகரித்துள்ளதால் சைக்கிள் விலையும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதுக்கோட்டைமாவட்ட கீரமங்கலம், கொத்தமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் குறுகிய தூரப் பயணங்களுக்கு பெட்ரோல் விலை உயர்வால் மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்துவதை குறைத்து சைக்கிள் பயணங்களை தொடங்கியுள்ளனர்.
மேலும் புதிய சைக்கிள்கள் விலை உயர்வாக உள்ளதால் தங்கள் வீடுகளில் கிடந்த பழைய சைக்கிள்களை பழுது நீக்கி பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.இது குறித்து சைக்கிள் பழுது நீக்கும் தொழிலாளி மணிவாசகம் கூறியதாவது:-
நான் சுமார் 40 வருடமாக வாடகை சைக்கிள் கம்பெனி மற்றும் பழுது பார்க்கும் கடை வைத்திருக்கிறேன். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மோட்டார் சைக்கிள்கள் அதிகம் பயன்படுத்துவதால் சைக்கிள் ஓட்டுவது குறைந்தது. அதனால் வாடகை சைக்கிள் கடையை மூடிவிட்டேன். பழுது நீக்கும் வேலையும் இல்லை. இதனால் பெட்டிக்கடை வைத்திருந்தேன்.
தற்போது பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மீண்டும் சைக்கிள்களை ஓட்டத் தொடங்கியுள்ளனர்.
வீட்டில் முடங்கி கிடந்த பழைய சைக்கிள்களை பழுது நீக்க கொண்டு வருகிறார்கள். எனது பழைய வாடிக்கையாளர்கள் இப்போது வருவதால் பழுது நீக்கி கொடுக்கிறேன். 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வேலை கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது… இவ்வாறு அவர் கூறினார்.
– சேகர் டீலக்ஸ், புதுக்கோட்டை

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: