போலீஸாருக்கு பயிற்சி முகாம்..

மதுரை மாவட்ட காவலர்களுக்கு பயிற்சி முகாம்

மதுரை :

மதுரை மாவட்ட காவலர்களுக்கு நடந்த நாட்குறிப்பு எழுதும் பயிற்சி முகாம் துவங்கியது.

மதுரை மாவட்ட காவல் துறையில் உள்ள முதல் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள போலீசாருக்கு வழக்கு நாட்குறிப்பு குறித்த பயிற்சி 25 போலீசார் வீதம் 5 கட்டமாக 3 நாட்கள் நடைபெறுகிறது. முகாம் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள போலீசார் குடியிருப்பு பகுதியில் துவங்கியது. இதற்கான பயிற்சி முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் துவக்கி வைத்தார் . இதில் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ரமேஷ்பாபு, சைபர் குற்றத்தடுப்பு பிரிவு டிஎஸ்பி ராஜேஸ்வரி, மனநல மருத்துவர் சி .ஆர். ராமசுப்பிரமணியன், கண்ணன் பலர் முகாமில் பயிற்சி அளித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: