தனியார் ஆலய பணியாளர்களுக்கு நிவாரணம்..

தனியார்
கோயில்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு நிவாரணம்:

மதுரை:

மதுரை நகரில் அண்ணாநகர், மேலமடை, கோமதிபுரம், ஜூப்பிலி டவுன் ஆகிய பகுதிகளில் தனியார் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் ஆலயப் பணியாளர்களுக்கு சமூக சேவகரும், மக்கள் நீதி மைய நிர்வாகியுமான, அண்ணாநகர் முத்துராமன், அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.
இவர், கடந்த ஒன்றரை ஆண்டாக மதுரை நகரில் பல்வேறு தரப்பட்ட கலைஞர்களுக்கு, தொடர்ந்து கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார்.
இவர் தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பங்கை தொடர்ந்து சமூகப் பணிகளுக்கு செலவிட்டு வருகிறார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: