மதுரையில் கொரோனா தாக்கம் குறைவு..

கொரோனா தடுப்பூசி அதிகம் போடுவதற்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வே: அமைச்சர்:

மதுரை:

மதுரை மாவட்டத்தில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாகவே, அதிக மக்கள் தடுப்பூசி செலுத்துகின்றனர் என, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராசன் கூறினார்.
மதுரை மாநகராட்சி சார்பில், மதுரை மத்திய தொகுதியில் உள்ள எட்டு, 83, 87 ஆகிய வார்டுகளில், திங்கள்கிழமை காலை கொரோனா தடுப்பூசி முகாம்கள்,அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்து பேசியது:
அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் தான், மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
தமிழக முதல்வர் சீரிய தலைமையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை பெருகி வருகிறது.
மதுரை மாநகராட்சி சார்பில், மதுரை நகரில் தினசரி நோய் தடுப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லையென்ற நிலையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது என்றார்.
மதுரை மத்திய தொகுதியில் மாநகராட்சி சார்பில் தடுப்பூசி முகாமுக்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனிஷ்சேகர் தலைமை வகித்தார். மதுரை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: