பெயிண்டர்கள் ஓவியர்கள் நலச்சங்கக் கூட்ட ம்..

பெயிண்டர்கள்ஓவியர்கள்
நலசங்கநிர்வாகிகள்கூட்டம்:

வாடிப்பட்டி, ஜுன்.28-

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றிய அனைத்துபெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நலசங்க நிர்வாகிகள் கூட்டம் போடிநாயக்கன்பட்டி அய்யப்பன்கோவில்வளாகத்தில் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு, மாவட்ட த் தலைவர் கிருபன் தலைமை தாங்கினார்.
மாநகர் மாவட்ட செயலாளர் சேவியர்பாபு முன்னிலை வகித்தார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் வரவேற்றார்.
இந்தக் கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
அதில், தலைவராக திருப்பதி, துணைத் தலைவராக சி.வி.பாண்டி, செயலாளராக நீலகண்டன், துணைச் செயலாளர்களாக ஆர்.கண்ணன்,பாண்டிராஜன், முத்தழகு, ராஜேந்திரன், பொருளாளராக வீரபத்திரன், துணைப் பொருளாளராக சுந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், அனைத்து உறுப்பினர்களுக்கும் அடையாளஅட்டை வழங்கப்பட்டது. முடிவில், புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: