ஆலயங்களை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம்..

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களை திறக்க கோரி தமிழகம் முழுவதும் இந்து முன்னணியினர்ஆர்ப்பாட்டம்:

மதுரை:

கொரானா வைரஸ் தொற்று காரணமாக,
தமிழகத்தில் தளர்வுகளுடன்
கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
இதில், கோவில்கள் ஜவுளி கடைகள் நகைக் கடைகளுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கோவில்களை தடுக்கக் கோரி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மாநகர் கீரைத்துறை பகுதியில் இந்து முன்னணி மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் அரசு பாண்டி தலைமையில், இந்து முன்னணி கட்சியினர் கையில் சூடம் ஏற்றியும் சிறுவர் சாமி வேட மணிந்தும், கோவில்களை திறக்கக் கோரி, கண்டன கோஷங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: