பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர் ப்பாட்டம்:

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் :

அலங்காநல்லூர், ஜூன்.13-

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யங்கோட்டை அருகே உள்ள பெட்ரோல் பங்க் முன்பாக தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் மத்திய அரசின் விரோத போக்கை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு , அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு மாவட்ட த் தலைவர் சோனைமுத்து தலைமை தாங்கினார். ஊடகப்பிரிவு தொகுதி தலைவர் வையாபுரி, மாவட்ட துணைத் தலைவர் ராகுல், வழக்கறிஞர் அரவிந்த், வட்டாரத் தலைவர் சுப்பாராயலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் செல்லப்பா சரவணன் எதிர்ப்பு உறுதிமொழி வாசித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் கடும் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் விரோதப் போக்கை கண்டித்தும், பெட்ரோல் டீசல் மீதான வரியை வாபஸ் வாங்க வலியுறுத்தியும், கொரோனா தடுப்பு ஊசி அனைவருக்கும் வழங்க வலியுறுத்தியும், சுமார் 50-க்கும் மேற்பட்ட காங்கிரசார் கண்டன கோஷங்களை எழுப்பி , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: