மதுரையில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது.. .அமைச்சர் மூர்த்தி..

மதுரை மக்கள் ஒத்துழைப்போடு கொரோனா குறைந்துள்ளதாகவும், மூன்றாவது அலை முன்னெச்சரக்கை தடுப்பு நடவடிக்கை:

மதுரை :

மக்கள் ஒத்துழைப்போடு கொரோனா குறைந்துள்ளதாகவும், மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூர் காசநோய் மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய 200 படுக்கை கொரோனா கவனிப்பு மையம் மையத்தை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து , அமைச்சர் மூர்த்தி செய்தியாளர் கூறியதாவது :- ராஜாஜி மருத்துவமனையில் புதிதாக 250 ஆக்சிஜன் படுக்கைகள், தோப்பூரில் 200 படுக்கை கொண்ட மையத்தை திறந்து வைத்துள்ளோம். கொரோனா மனநிறைவோடு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.
மூன்றாவது அலை வரும் என கூறியுள்ளனர். வருகின்ற போது எவ்வித பயமுமின்றி அதற்கான முன்னேற்பாடுகளை இப்போதே செய்திருக்கிறோம்.
மூன்று மாதத்தில் இருந்த கொரோனா அலையை ஒரே மாதத்தில் கட்டுபடித்தியுள்ளோம். தமிழகத்தில் 36,000 பேர் தற்போது 23 ஆயிரம் பேர் ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் எவரும் செய்யாததை தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்துள்ளார். பாதுகாப்பு உடையுடன் மருத்துவர் செவிலியர்களுடன் நோயாளிகளை சந்தித்துள்ளார். ஆனால் , அதிமுக ஆட்சியில் யாரும் உள்ளே சென்று பார்த்தது கிடையாது. எங்களுடைய ஆய்வு பயனுள்ளதாக இருந்தது. ஒரு மாத காலத்திற்குள் நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது.
வெளிமாநிலங்களில் இருந்து ஆக்சிஜனை கொண்டு வந்து ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லையே என்ற குறை நீக்கியுள்ளது. இன்று தேவைக்கு அதிகமாக இருப்பு உள்ளது. தற்போது 450 படுகைகள் தற்காப்புக்காக ஏற்படுத்தி உள்ளனர். நோய்த் தொற்று குறைந்துள்ளது. தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர் உள்ளிட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது, என தெரிவித்துள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: