திருநங்கைகளுக்கு உதவிய தன்னார்வலர்கள்

வாழ்வாதாரம் இழந்த திருநங்கைகளுக்கு உதவிக்கரம் நீட்டிய மதுரை மாநகர காவல்துறை:

மதுரை

மதுரை விளாச்சேரியில் உள்ள ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் சார்பாக கொரோனா இரண்டாம் அலையால் மதுரையில் உள்ள திருநங்கைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் நம்மிடம் உதவி கேட்டதால் 200 பேருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான சுமார் ரூபாய் . 2 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்களை நமது அறக்கட்டளைக்கு உதவக்கூடிய நல்ல உள்ளங்களின் உதவியுடனும்,
மாவட்ட ஆட்சியர் அனுமதியுடனும், 4 இடங்களில் (எஸ்.எஸ். காலணி, செல்லூர், பீ பீ குளம், மதிச்சியம் )சமூக இடைவெளியை பின்பற்றியும் வழங்கப்பட்டது.
இதில், ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் சார்பாக நிர்வாக இயக்குனர் மரு.ரா.பாலகுருசாமி . மணிக்குமார் காவல்துறை உதவி ஆய்வாளர் கலந்து கொண்டு மளிகை பொருட்களை அனைவருக்கும் வழங்கினர்.
அதை பெற்றுக்கொண்டு , உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் , நமது அறக்கட்டளைக்கும் நன்றி தெரிவித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: