கோடை மழையில் சேதமாகும் நெல்..

கோடை மழையில் கலத்தில் காய்ந்த நெல் நனைந்து சேதம் ரூபாய் பலலட்சம் பாதிப்படைந்த விவசாயிகள் கவலை நெல் கொள்முதல் நிலையம் அமைய அரசிடம் கோரிக்கை:

சோழவந்தான் ஜூன். 1.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் களத்தில் வெயிலில் காய வைத்தனர் அப்போது பெய்த கோடை மழையில் நனைந்ததால் எதிர்பார்த்த கூடுதல் விலை இல்லை என்றும் பல லட்சம் ரூபாய் நஷ்டமடைந்து கவலை அடைந்த விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோழவந்தான் பகுதியில் தென்கரை முள்ளிப்பள்ளம் ஊத்துக்குளி மழையூர் நாராயணபுரம் கச்சிராயிருப்பு மேலக்கால் போன்ற பல கிராமங்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் புதுவகை சன்ன ரக பொன்னி வகை குறுகிய கால நெற்பயிர்கள் கண்மாய் பாசனத்தில் பயிரிடப்பட்டன
நெற்பயிர்கள் முற்றி பல இடங்களில் அறுவடை பணி மும்முரமாக நடக்கிறது பல விவசாயிகள் இயந்திரம் மூலம் அறுவடை செய்த நெல் களத்தில் பரப்பி சுட்டெரிக்கும் வெயிலில் கூலியாட்கள் காய வைத்தனர் வியாபாரிகளிடம் கூடுதல் விலைக்கு விற்க முனைப்பாக செயல்பட்டனர் நன்றாக காய்ந்து நிலையிள் மூடைகளில் அடுக்கி எடை போடும் பணியில் ஈடுபட்டனர் இத்தருணத்தில் திடீரென பகல் 2 மணி அளவில் கோடை கனமழை பெய்தது நன்றாக காய்ந்த நெல் மழை நீரால் நனைந்து பல பகுதிகளில் தண்ணீரோடு அடித்துச் சென்றன பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு பாதிப்பான விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் பாதிப்பான ஊத்துக்குளி விவசாயி திருப்பதி கூறுகையில் எங்களது பாரம்பரிய தொழில் விவசாயம் தான் நெல் வாழை பயிரிட்டு எளியமுறையில்
தென்கரை ஊத்துக்குளி பகுதியில் எனக்கு சொந்தமாக 17 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டேன்
சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வருகிறோம் அதில் குடும்பம் நடத்தி ஒரு ஏக்கருக்கு விதை உரம் பூச்சிமருந்து விதைத்தல் களை எடுத்தல் உட்பட விவசாய பணிக்கு 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்கிறோம் ஒரு ஏக்கருக்கு கூடுதல் மகசூல் பெற்றால் 30 முதல் 35 மூட்டை நெல் அதிக லாபம் ரூபாய் பத்தாயிரம் கிடைக்கும் அரசின் கொள்முதல் நிலையம் இருந்தால் இன்னும் கூடுதல் லாபம் கிடைக்கும் தற்போது வியாபாரிகள் இடைத்தரகர்கள் அடிமாட்டு விலைக்கு ஒரு மூட்டைக்கு 65 கிலோ வீதம் அளந்து விற்பனை செய்கிறோம் அறுவடை நெல்லை களத்துமேட்டில் வெயிலில் காய வைத்த போது திடீரென்று பெய்த கோடை மழையில் நனைந்து பெருத்த சேதம் அடைந்தது இந்நிலையில் எதிர்பார்த்த விலை கிடைக்காததால் நஷ்டம் அடைந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
எங்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை அரசு ஊழியர்களுக்கு வருமானம் சம்பளம் கிம்பளம் கூடுதலாக வழங்கப்படுகிறது அதுபோல் புதிதாக அமைந்த திமுக அரசு விவசாயிகள் மீதும் அக்கறை காட்டி நெல் கூடுதல் விலை விற்க அல்லது நெல் கொள்முதல் நிலையம் அமைத்து சேதத்திற்கு நிவாரணம் வழங்கி எங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: