இராசபாளயத்தில் உணவு விநியோகம் செய்ய எம். எல்.ஏ.

இராஜபாளையத்தில் ஊரடங்கினால் உணவின்றி தவிக்கும் சாலையோர வாசிகள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் என 6 ஆயிரம் பேருக்கு உணவு தயாரித்து வழங்கும் சட்டமன்ற உறுப்பினர்:

மதுரை:

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் கடந்தாண்டு எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கினார்.
அதேபோன்று, இந்த ஆண்டு கொரோனா அதிகரித்துள்ள இந்த நிலையில், ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டதால் சாலையோரத்தில் வீடின்றி வசிப்பவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய அவர்களுடைய உறவினர்கள் என பலர் உணவுக்காக கஷ்டப்பட்டு வரும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தனது கார்மென்ட் கம்பெனி அருகே ஒரு திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அதில் சுமார் 6 ஆயிரம் பேருக்கு மதியம் உணவு தயாரித்து வழங்கி வருகிறார்.
இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் ஆட்டோவில் உணவு பொட்டலங்களை எடுத்து சென்று வழங்கி வருகிறார்.
இதனால் ,சாலையோர வாசிகள் மருத்துவமனையில் உள்ளவர்கள் பலரும் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: