வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடிப்பு..

ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடிப்பு சேத்தூர் ஊரக காவல்துறையினர் விசாரணை:

மதுரை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியில் வசித்து வரும் கண்ணன் என்ற அன்பழகன் வீட்டின் பின்புறம் உள்ள தொட்டியில் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக வெடித்து பலத்த சத்தத்துடன் வெடித்ததால் அருகில் இருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின்பேரில், விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கண்ணன் என்ற அன்பழகன் அப்பகுதியில் இருந்து தலைமறைவு. இவர் மீது ஏற்கனவே விலங்குகள் வேட்டையாடியது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இச்சம்பவம் குறித்து , வழக்குப்பதிவு செய்த சேத்தூர் ஊரக காவல் துறையினர் தலைமறைவான குற்றவாளியை தேடி வருகின்றனர்.
மேலும், இந்த நாட்டு வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
பலத்த சத்தத்துடன் வெடித்தது காரணமாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: