காரியாபட்டி ஒன்றியக் குழுக் கூட்டம்:

காரியாபட்டி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் அதிகாரிகள் – கவுன்சிலர்கள் கடும் விவாதம் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு:

காரியாபட்டி மே.29:

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் முத்துமாரி தலைமையிலும் துணைத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது .
கூட்டத்தில், நடந்து முடிந்த சட்டமன்ற அமோக வெற்றி அமைச்சர்களாக பதவியேற்றுள்ள தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர்களுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது .
கூட்டத்தில், யூனியன் சார்பாக வரவுசெலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது. இதில் கொண்டு வந்த தீர்மானங்கள் குறித்து கவுன்சிலர்களின் விவாதம் நடந்தது. கவுன்சிலர் தோப்பூர் முருகன் :- அல்லார பேரி கிராமத்துக்கு ஒன்றிய கவுன்சிலர் என்ற முறையில் கொண்டுவந்த வேலைக்கு ஊராட்சி மன்றத் தலைவருக்கு வேலைக்காக உத்தரவை ஏன் கொடுத்தீர்கள் ஒரே ஊரில் இரண்டு பேருக்கு ஆர்டர் கொடுக்கலாமா கவுன்சிலர் திருச்செல்வம்: மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் எங்களிடம் அதிகாரிகள் எதையும் கேட்காமல் புறக்கணித்து வருகிறார்: கவுன்சிலர் நாகபாண்டீஸ்வரி: மக்களின் தேவைகள் பற்றி யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரி யிடம் கேட்டால் இங்கு உங்களுக்கு என்ன வேலை என்று சொல்கிறார்: கவுன்சிலர் தோப்பூர் முருகன் கவுன்சிலர்களை அநாகரிகமாக நடத்தலாமா மக்களால் தேர்ந்தெடுக்க பிரதிநிதிகளாக நாங்களும் மக்களுக்கு சேவை செய்யத்தான் இருக்கின்றோம் கவுன்சிலர் திருச்செல்வம் : டெங்கு காய்ச்சல் ஒழிப்புக்காக தற்காலிக பணியாளர்களுக்கு சுமார் 10 லட்ச ம் செலவு செய்யப்பட்டுள்ளதே. கவுன்சிலர் தோப்பூர் முருகன் : டெங்கு காய்ச்சல் கிடையாது வீணாக செலவு செய்யும் பணத்தில் கொரோனா தடுப்பு பணிகளை செய்யலாம் கவுசிலர் சிதம்பர பாரதி: காரியாபட்டி ஒன்றியத்தில் கிராமங்களில் நோய் தடுப்பு பணிகளை தீவிரம் படுத்தலாம் கவுன்சிலர் சேகர்: அரசகுளம் கிராமத்தில் 24 தனிநபர் கழிப்பறை கட்ட சொல்லிவிட்டு வேலைக்காக ஆர்டரை பயனாளிகளுக்கு தெரியாமல் ரத்து செய்துவிட்டனர். இதனால், பயனாளிகள் செய்துமுடித்த வேலைக்கு இதுவரை பணம் போடவில்லை கவுன்சிலர் திருச்செல்வம்: ஒவ்வொரு கூட்டத்திலும் மக்கள் தேவைகள் பற்றி எதை சொன்னாலும் அதிகாரிகள், செய்ய மறுத்துவிடுகின்றனர் இவ்வாறு கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு அதிகாரிகள் முன்னுக்கு முரணாக பதில் சொன்ன காரணத்தால் இந்த கூட்டத்தில் நியாயம் கிடைக்காது என்று அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: