தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறிகள் விற்ப னை…

திருப்பரங்குன்றம் பகுதிகளில் தோட்டக்கலை துறை மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு சார்பாக காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றது:

மதுரை

கொரனோ இரண்டாவது அலை ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் காய்கறி மற்றும் பழங்கள் வாரச் சந்தைகள் மற்றும் கடைகள் மூடப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி மதுரை மாநகராட்சி மூலம், திருப்பரங்குன்றம் மற்றும் திருநகர் சுற்றியுள்ள பகுதிகளில் சரக்கு வாகனம் மூலம் தெருக்கள் வழியாக வீடு வீடாக காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்ய படுகின்றன.
தோட்டக்கலைத் துறையின் ஏற்பாட்டில் , காய்கறி மற்றும் பழங்களின் விலை மலிவாகவும் உள்ளதால் காய்கறிகளை மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும் விதமாக நகரும் காய்கறி விற்பனை வாகனம் மூலம் விற்பனை செய்வதை மகிழ்ச்சி என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

One thought on “தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறிகள் விற்ப னை…

  1. Please expand this one, My streets are getting vegetables two days once. There is no one vehicle of selling fruits I am seeing. With out healthy food staying in lock down is useless.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: