சொசைட்டி ஊழியர்கள் ஸ்டிரைக்

மதுரை மாவட்டத்தில் தொடக்கக் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்தம்:

அலங்காநல்லூர், ஜூலை. 27.

ரேசன் கடை பணியாளருக்கு கொரோனா வைரஸ் சிறப்பு காப்பீடு, ஊரங்கு காலம் முழுவதும் போக்குவரத்து படி ரூ. 200. மற்றும் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு சம்பள உயர்வு, அனைத்து கூட்டுறவு கடன்களும், தொடக்க வேளாண் வங்கிகள் மூலம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வங்கியை அடைத்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பாண்டி என்பவர் கூறியது:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையான சம்பளம், பணி நிறைவு பெற்ற ஊழியர்களுக்கு பென்சன், அலுவலக பணியாளர்களுக்கு மூன்று கட்ட ஊதிய ஒப்பந்தத்தை அரசு அமல்படுத்த வேண்டும் என்றார்.
கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும் என, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: