மாவட்ட போலீஸ் எஸ்பி நடவடிக்கை எடுப்பாரா?

சோழவந்தான் பகுதி சிறார்களின் சமூக விரோத கூடாரமாக மாறிவருகிறது புதிய மாவட்ட கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்:

சோழவந்தான்,ஜூலை. 24.

மதுரை மாவட்டம்,
சோழவந்தான் தொகுதி சிறார்களின் சமூக விரோத கூடாரமாக மாறி வருகிறது சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர் சோழவந்தான் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகள், பாழடைந்த வீடுகள், புதிதாக கட்டி முடிக்கப்படாத நிலையில் உள்ள வீடுகள்,ஊர் ஒதுக்குப்புறம்,பயணிகள் நிழற்குடைகள்,வைகை ஆற்றுப்பகுதியில் அடர்த்தியாக நாணல் உள்ள ஆகிய இடங்களில் சிறார்கள் சமூக விரோத கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர் இப்பகுதிகளில் சோழவந்தான் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து சிறார்கள் ஒரே இடத்தில் சேர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் இதுகுறித்து சில இடங்களில்சமூக விரோதிகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தங்கி மதுவருந்தி பாட்டிலை உடைத்து இங்கு உள்ள அறைகளை உடைத்து டிவி உட்பட பொருட்களை எடுத்துச் சென்றார்கள் இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்துள்ளார் தற்போது ஊரடங்கு உத்தரவால் பள்ளி விடுமுறை இருப்பதால் பகலிலும் இரவிலும் சிறார்கள் சமூக விரோத செயலில் ஈடுபட்டு வருகின்றனர் பள்ளி கட்டடத்தின் மீது ஏறி அங்கு சீட்டு விளையாடுவது மது அருந்துவதும் இரவு நேரங்களில் தகாத செயல்களில் ஈடுபடுவதாக இப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தெரிவித்தனர் காவல்துறையினரும் வருகின்ற நேரத்தில் சிறார்கள் தப்பி ஓடி விடுகின்றனர் காவல்துறை சென்ற உடன் மீண்டும் சிறார்கள் பள்ளி வளாகத்தில் அரங்கேறி சமூக விரோத செயல்களில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர் பள்ளி வளாகம் சமூக விரோத செயல்களில் கூடாரமாக இருந்து வருகிறது காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து இப்பகுதி சிறார்கள் சீரழிவதை உடனே நடவடிக்கை எடுத்து பள்ளி வளாகத்தில் நடந்து வரக்கூடிய சமூக விரோத செயல்களை தடுக்க வேண்டும் என்று இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் போலீசார் பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடத்தினர் இதில் சோழவந்தான் பகுதியில் சிசிடிவி கேமரா வைப்பதற்கு தீர்மானித்தனர் போலீசாரின் வேண்டுகோளை ஏற்று இங்குள்ள நிறுவனங்கள், பெரிய கடைகளிலும் மற்றும் தெற்கு ரத வீதி மேல ரத வீதியிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது தற்போது சில இடங்களில் கேமராவை சமூக விரோதிகள் சேதப்படுத்தி வருகின்றனர் உடனே போலீசார் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் இப்பகுதியில் சிறார்களின் குற்றச்சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது வைகை ஆற்றுப் பகுதிகளில், அரசுப்பள்ளிகள், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள அரசு அலுவலங்கள்,பாழடைந்த வீடுகள், புதிதாக கட்டி முடிக்கப்படாத நிலையில் உள்ள வீடுகள் ஆகிய இடங்களில் இரவுபகலாக சிறார்களின் சமூக விரோத செயல் கூடாரமாக அமைந்து வருவதாகவும் இதை புதிதாக வந்த மாவட்ட கண்காணிப்பாளர் துரித நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சீரழிந்து வரும் சிறார்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் வைகை ஆற்றுப் பகுதிகளில் பகலிலும் இரவிலும் தனிப்படை ரோந்துக்கு உத்தர விடவும் தேவைப்பட்டால் அதிகமாக சிறார்கள் கூறக்கூடிய இடங்களில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் சோழவந்தானில் ஒரு வழிப்பாதையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் இப்பகுதி பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: