சிறப்பு பரிசோதனை முகாம்

சோழவந்தானில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம்:

சோழவந்தான், ஜூலை. 24.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி சார்பில் கொரோனா சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமுக்கு, சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் ஜுலாலன்
பானு தலைமை வகித்தார்.
கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ஹேமலதா, மனோஜ் பாண்டியன் ஆகியோர், பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்களிடம், கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணன், பேரூராட்சி இளநிலை உதவியாளர் முத்துக்குமார், கல்யாணசுந்தரம், சுகாதார ஆய்வாளர் குருசங்கர், துப்புரவு மேற்பார்வையாளர்கள் சுந்தர்ராஜன், பசுபதி, பணியாளர்கள் அசோக், சதிஷ் மற்றும் சோணை, பூவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: