கொலை வழக்கில் 9 பேர் கைது

அலங்காநல்லூர் அருகே இளைஞர் கொலை வழக்கில் 9 பேர் கைது

அலங்காநல்லூர், ஜிலை. 23.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரை வெட்டி கொலை செய்த வழக்கில் 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அலங்காநல்லூர் அருகே கல்லனையைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணக்குமார், விக்னேஷ் இருவரும் சகோதரர்கள்.
இவர்களுக்கும், மதுரை கூடல்நகரை சேர்ந்த அம்ரீஸ் 23. ஆகியோரிடையே முன்பகை இருந்து வந்ததாம்.
இந் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, மர்மக் கும்பல் வெட்டி கொலை செய்து விட்டு, தலைமறைவாகிவிட்டது.
இது தொடர்பாக அலங்காநல்லூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து, மதுரை கூடல்நகரைச் சேர்ந்த அபிஷேக்சிங் 25., கெவின் 25., அம்ரீஸ் 23., ஹரிஹரன் 23., மனோரூபின்சன் 23., கோபிநாத் 22., பாரதி 21., சுக்ரணம் 19., சூரியபிரகாஷ் 19. ஆகியோர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: