மின் கட்டண உயர்வு: திமுக ஆர்ப்பாட்டம்

முள்ளிப்பள்ளத்தில் திமுகவினர் மின்கட்டண உயர்வை கண்டித்து வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம்

சோழவந்தான்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளத்தில், மின் கட்டண உயர்வைக் கண்டித்து திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு, திமுக கிளைச் செயலர் கேபிள் ராஜா தலைமை வகித்தார். திமுகவினர் சமூக இடைவெளியை கடைபிடித்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இதேபோல், சோழவந்தான் பேட்டை கிராமத்தில் திமுகவினர் சமுக இடைவெளியை பின்பற்றி, மின்சாரக் கட்டண உயர்வைக் கண்டித்து மாவட்ட பிரதிநிதி கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: