அலங்காநல்லூரில் திமுக ஆர்ப்பாட்டம்:
அலங்காநல்லூர்
மின்சார வாரியத்தின் திடீர் கட்டண உயர்வு செய்ததாக கோரி, திமுகவினர் அலங்காநல்லூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, திமுக மாவட்ட மகளிரணி நிர்வாகி ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.நகரச் செயலர் ராஜேந்திரன், மாவட்ட மகளிரணி நிர்வாகி வீட்டு முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
நிர்வாகிகள் சந்திரன், வைகுண்டம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அலங்காநல்லூர் அருகே பி. மேட்டுப்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்தை, திமுக ஒன்றியச் செயலர் கென்னடி தொடங்கி வைத்தார்.