வெறிச்சோடிய கடற்கரை

வெறிச்சோடிய கடற்கரைகள்

கொரோனா பரவல் எதிரொலி மற்றும் ஊரடங்கு காரணமாக ஆடி அமாவாசை நாளான இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டது.
இதனால், கடற்கரைக்கு செல்வதைத் தடுக்க பல வழித்தடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் இந்நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவியும் ராமேஸ்வரம் கோயில் ரதவீதி மற்றும் அக்னி தீர்த்தக்கடற்கரை பகுதிகளில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி அமைதியாக காட்சியளிக்கிறது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: