விழிப்புணர்வு

பெரிய முக கவசத்துடன் வழிகாட்டி மணிகண்டன் விழிப்புணர்வு

மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் கொரோணா நோய் தடுப்பு விழிப்புணர்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்:
மக்கள் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், சோப்பு போட்டு கைகழுவ வேண்டும், நோய் எதிர்ப்பு சக்திக்கு சத்தான உணவு உட்கொள்ள வேண்டும் மற்றும் நோய் பயமின்றி முன்னெச்சரிக்கையுடன் மன வலிமையோடு இருக்க வேண்டும் போன்ற கருத்துக்களை வலியுறுத்தி எனது வாகனத்தில் பெரிய அளவு முகக்கவசம் மற்றும் பதாகையை ஏந்தி பயணிக்கிறேன்.

இதுகுறித்து பொதுமக்களிடம் நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

மதுரையில் சிம்மக்கல், யானைக்கல், நெல்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடமாடும் பழக்கடைகள், போக்குவரத்து சிக்னலில் செல்லும் பாதசாரிகள் உள்ளிட்டோருக்கு விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறேன் என தெரிவித்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: