மதுரையில் தர்பணம்: போலீஸார் வழக்கு

*மதுரையில் பொது ஊரடங்கு மீறி வைகை ஆற்றங்கரையில் 300 பேரைக் கொண்டு தர்ப்பணம் செய்த புரோகிதர் கைது காவல்துறை விசாரணை..!!!*

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்கள் அத்துமீறி பொது இடங்களில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் இன்று ஆடி அமாவாசை என்பதால் ஆற்றங்கரைகள்,கோவில் குளங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம் அதனால் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய கோவில்கள் ஆற்றங்கரைகளில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டது,இந்த நிலையில் மதுரை வைகை ஆற்றங்கரையில் காவல் துறையின் அனுமதியின்றி சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வைத்து புரோகிதர் ஒருவர் தர்ப்பணம் செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தி மேலும் புரோகிதரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்,மேலும் அலட்சியமாக 300க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஆற்றங்கரையில் அமரவைத்து தர்ப்பணம் செய்த சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: