ஆட்டோடிரைவர் தற்கொலை முயற்சி

கள்ளக் காதலை கைவிட மனைவி மறுப்பு: கணவர் மகன்கள் தற்கொலை முயற்சி

பாலமேடு

மதுரை

மதுரை அருகே பாலமேட்டில், மனைவி கள்ளக் காதலை கைவிட மறுத்ததால், கணவர் மற்றும் மகன்கள் விஷமருந்தியதில் இரு மகன்கள் பலியாயினர்.
இதுபற்றி போலீஸார் கூறியது:
பாலமேடைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் குமார். இவர் தன் மனைவி உஷாவிடம் கள்ளக் காதலை கைவிடும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
அதற்கு அவர் மறுக்கவே, குமார், அவரது மகன்களான சித்தார்த் 6, கோப்பெருஞ்சோழன் 8. ஆகியோர் விஷமருந்தியதாக தெரிகிறது.
இதில் இரண்டு மகன்களும் பலியாயினர்.
குமார் மட்டும் ஆபத்தானநிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பாலமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: