தார்ச்சாலை: பாஜக புகார்

தார்ச்சாலை போட்டதில் தரமில்லை: பாஜக புகார்

அலங்காநல்லூர்

பாரதிய ஜனதா கட்சி மதுரை புறநகர் மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியதத்தில் கிராம சாலைல இணைப்பு திட்டத்தில்போடப்பட்ட சாலை குட்லாடம்பட்டி முதல் தாடகை நாச்சியம்மன் அருவி வரை போடப்பட்ட தார் சாலை முறையாகப் போடப்படவில்லை என்று ,மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சிகள் ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் கலெக்டர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.
இந்த மனுவில் தரமற்று சாலைகள் இருக்கின்ற இந்த சாலையை மறுசீரமைப்பு செய்ய கோரியும் மதிப்பீட்டின் அடிப்படையில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி பொதுமக்களுக்கு தரமான சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரி மனு கொடுக்கப்பட்டது.
இதில் ,மதுரை புறநகர் மாவட்டத்தின் பொதுச்செயலாளர்கள்ஆர் கோவிந்த மூர்த்தி ,வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் திரு திருமுருகன் , மாவட்ட பொதுச்செயலாளர் மூவேந்திரன், மதுரை புறநகர் மாவட்ட அரசு தொடர்புத்துறை மாவட்டத் தலைவர் பெருமாள்
மற்றும்
சீதாராமன்,
வாடிப்பட்டி வடக்கு ஒன்றியத் தலைவர் வாசுதேவன், ஒன்றிய துணைத் தலைவர் காளிமுத்து, சமயநல்லூர் மேற்கு ஒன்றியத் தலைவர் ஜெயபாண்டி ,ஒன்றிய பொதுச் செயலாளர் முத்துப்பாண்டி, இளைஞரணி மாவட்டத் துணைத் தலைவர் ரவிசங்கர் ,மீனவர் பிரிவு முன்னாள் மாவட்டத் தலைவர் டாக்டர் சண்முகானந்தம், அலங்காநல்லூர் தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் இருளப்பன் ,மாவட்ட பொதுச் செயலர் கோவிந்தமூர்த்தி
உள்ளிட்டோர் மதுரை ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலரிடம்
மனு கொடுத்தனர் .

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: